Breaking News

பதவி விலக தயார் : நாமல் ராஜபக்ஸ விடுத்த சவால்


ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்ற விதத்தில் அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்படுவார்களாயின், தான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை குறைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதனால், தமது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு முன்னுதாரணமாக செயற்பட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முடியும் என்று நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அவ்வாறு செய்யும் பட்சத்தில் தானும் பதவியினை விலக தயார் என்று அவர் கூறுகின்றார். (Vavuniyan) 

No comments