சிறுமிகள் துஷ்பிரயோகம் - கிராம சேவையாளர் சிக்கினார்
இரண்டு பதின்ம வயது சிறுமிகளை தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதாக தெரிவித்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த கிராம சேவையாளரை (02) அம்பலாந்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 மற்றும் 4 மாத வயதுடைய சிறுமியும், 14 மற்றும் 3 மாத வயதுடைய சிறுமியும், வீட்டுப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட கிராம சேவையாளரும் திருமணமானவர். குற்றவியல் சட்டத்தின் 345 மற்றும் 365 பிரிவின் கீழ் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் கிராம உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் நேற்று (03) ஆஜர்படுத்தப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
No comments