மனைவி உட்பட 03 பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர்
வெலிவேரிய பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேக நபர் ஒருவர் தனது மனைவி உட்பட மூன்று பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர்இ தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் சந்தேக நபரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வேபட வடக்கில் வசிக்கும் 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவரின் சகோதரி மற்றும் நண்பி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments