றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன வவுனியாவை சேர்ந்த மூவரில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு
நுவரெலியா - றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன வவுனியாவை சேர்ந்த மூவரில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இருந்து ஒரு குழுவினர் சுற்றுலா சென்றுள்ளனர்.
இதன்போது நேற்றையதினம் றம்பொட நீர்வீழ்ச்சியில் 7 பேர் கொண்ட குழுவினர் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன், ஏனைய நால்வர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நீரில் அடித்துச்செல்லப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போயுள்ள மேலும் இருவரை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post Comment
No comments