Breaking News

வவுனியாவில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்


வவுனியாவில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. 

குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன்.

நேற்றையதினம் இறம்பைக்குளதில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதேவேளை கோவில்குளத்திலும் பெண்ணொருவரிடம் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (Vavuniyan) 

No comments