Breaking News

பேருந்து சேவைகள் குறித்து வெளிவந்த செய்தி


தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இ.போ.ச விசேட பேருந்து சேவை இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபை சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனினும், தனியார் பேருந்துகள், இன்றும், நாளையும் வழமைபோன்று சேவையில் ஈடுபட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகள் வழமைபோன்று சேவையில் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments