சுமந்திரனை பிரதி சபாநாயகராக்க பிரயத்தனம்
பிரதி சபாநாயகர் பதவிக்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனை முன்னிறுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து, அந்தப் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவை நியமிக்க ஆளும் தரப்பு யோசனைகள் முன்வைத்துள்ளன.
எனினும் தான் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே அந்த பதவிக்கு போட்டியிடுவேன் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரதி சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளும் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (Vavuniyan)
No comments