அரசாங்கத்திலிருந்து விலகுகின்றது சுதந்திர கட்சி
இது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் இன்று (04) மாலை 5 மணிக்கு சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளனர்.
அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள், நேற்று (03) மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் கூடியிருந்தனர்.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில், மூவர் நேற்றைய சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
இந்நிலையிலேயே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்திலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (Vavuniyan)
No comments