Breaking News

வவுனியா பல்கலைக்கழக மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு


வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் முன்மாதிரியான செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். 

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் மன்னார்  வீதியில் மிகவும் அதிகளவில் பாவிக்கப்படும் பேருந்து தரிப்பிடம்  ஒன்றினை  தேர்வு செய்து சுத்தமாக்கி  மற்றும்  வர்ணம் பூசி  அழகு படுத்தியுள்ளார்கள்.

இச்செயற்பாட்டினை வவுனியா பல்கலைக்கழக மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழக (IEEE Student Branch of the University of Vavuniya) மாணவர் கிளையினால் முன்னெடுக்கப்பட்டது. 

மேலும்  வரும் காலங்களில் இதனை தொடர்ச்சியாக பராமரிக்கவும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments