ஜனாதிபதியின் அதிகாரம் குறைப்பு -இறங்கி வந்தார் கோட்டாபய
அதன்படி, நடைபெறவுள்ள கட்சித் தலைமைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் எனத் தெரியவருகிறது.
குறித்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து எதிர்காலத்தில் நிறைவேற்றவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றம் மற்றும் பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும்.
2015 ஆம் ஆண்டு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரங்களை கடுமையாக குறைத்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரித்தது.
ஆனால் 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஜனாதிபதியின் பதவியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது.இதனையடுத்து 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments