இராஜினாமா கடிதத்தை கையளித்தார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான இவர், மே மாதம் முதலாம் திகதியில் இருந்து, தனது பதவியை இராஜினாமா செய்துகொள்வதாக குறிப்பிட்டு, கடிதத்தை கையளித்துள்ளார்.
விவசாயிகள் பெரும்பான்மையாக வாழும் தனது மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
7 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த அவர், தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படாமை குறித்து தாம் மிகுந்த வருத்தமடைவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (Vavuniyan)
No comments