திடீர் விபத்துக்கள் அதிகரிப்பு
இதுதொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, தாதி பயிற்சிப்பிரிவின் தாதி அதிகாரி புஸ்பா ரமனி டி சொய்சா தெரிவிக்கையில், பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான விபத்துக்களை குறைத்துக்கொள்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
வீதியில் செல்லும் போது வீதி ஒழுங்குவிதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவதன் மூலம் விபத்துக்களை குறைத்துக்கொள்ள முடியும். மதுபாவனையினாலும் பாரிய அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன.
திடீர் விபத்துக்களில் 85 வீதமானவை தனிநபர்களில் செயற்பாடுகளினால் இடம்பெறுகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்ட 167 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் இந்திக்க ஜாகொகொட தெரிவித்துள்ளார்.
இவர்களுள் 118 பேர் ஆண்கள். 85 பேர் பெண்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(Vavuniyan)
No comments