புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி
கடந்த வருடத்தை காட்டிலும், மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில் பட்டாசு மற்றும் கேளிக்கை வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணிகளால் பொதுமக்கள் பட்டாசு கொள்வனவு செய்வது, குறைவடைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களில், பலர் தற்போது தங்களது தொழிற்துறையை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு கடந்த காலங்களில் அதிகமானோர் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டனர்.
எனினும் தற்போது ஒரு சிலர் மாத்திரமே குறித்த தொழிற்துறையை முன்னெடுப்பதாக சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். (Vavuniyan)
No comments