Breaking News

கடும் நெருக்கடி! பதவி துறக்கத் தயாராகும் ராஜபக்சர்கள் - சிங்கள ஊடகம் பரபரப்புத் தகவல்


ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூவர் அமைச்சு பதவிகளைத் துறக்கத் தயாராகி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரே இவ்வாறு பதவி விலகவுள்ளனர் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் இன்று மாலை இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அந்த செய்தியில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments