Breaking News

பதவி விலகுவதாக மகிந்த உறுதியளிப்பு!!


பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று பிக்குகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவிக்கின்றார்.

பிக்குகள் குழுவுடனான சந்திப்பின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். நான்கு மதவாத பிக்குகள் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப ஒன்றாக இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் பதவியிலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால், அனைத்து அரசியல்வாதிகளும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் (Vavuniyan) 


No comments