Breaking News

பதவி விலகிய அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக அண்மையில் பதவி விலகிய அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளையடுத்து, கடந்த 3 ஆம் திகதி அமைச்சரவை பதவி விலகியது.

பின்னர், பல அமைச்சுப் பதவிகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வெற்றிடமாக இருந்த நிதியமைச்சர் பதவிக்கு முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், அலி சப்ரி 24 மணித்தியாலங்களுக்குள் அப்பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன பதவியேற்பாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பதவி விலகிய அமைச்சர்கள் இதுவரை தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.(Vavuniyan) 

No comments