றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற வவுனியாவை சேர்ந்த மூவரை காணவில்லை
நுவரெலியா - றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற வவுனியாவை சேர்ந்த 3 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம், 7 பேர் கொண்ட குழுவினர் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன், ஏனைய நால்வர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்றவர்களே இவ்வாறு சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் காணாமல்போயுள்ளவர்களில் 2 பெண்களும் ஆணொருவரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போயுள்ளவர்களை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Vavuniyan)
No comments