Breaking News

பாடசாலை மாணவிகள் புகையிரதத்தில் மோதி விபத்து


இன்று (30) காலை இரண்டு பாடசாலை மாணவிகள் புகையிரதத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தனர்.

அம்பலாங்கொடை குலரத்ன பாலம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் பம்பபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மற்றைய மாணவியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை இரண்டு மாணவிகளும் தண்டவாளத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது புகையிரதம் ஒன்று வருவதை அவதானித்த தண்டவாளத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது புகையிரதத்தில் மோதுண்டனர்.

17 வயதுடைய இரு மாணவிகளும் இன்று காலை மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments