Breaking News

ஜானாதிபதி பதவி விலக மாட்டார்! - அறிவிப்பு வெளியானது


ஜனாதிபதி தற்போதைய நிலையில் பதவி விலக மாட்டார் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் காட்டும் எந்தவொரு குழுவிற்கும் அரசாங்கத்தை ஒப்படைக்க ஜனாதிபதி தயாராக இருக்கிறார்" எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தற்போது கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்ங்கள்  தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிர், மக்களிடம் இருந்து வெளியான எதிர்ப்பையடுத்து நேற்றைய தினம் முழு அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகினர். 

இந்நிலையில், ஜனாதிபதி தற்போதைய நிலையில் பதவி விலக மாட்டார் என அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  (Vavuniyan) 


No comments