வவுனியாவில் மதகுருமார் அமைதிப்பேரணி
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் இருந்து நாடு மேம்பட வேண்டி தந்தையே எமது தேசத்தை விழித்தெழ செய்வீர் என்ற தொனிப்பொருளில் அமைதிப்பேரணியொன்று இன்று மாலை இடம்பெற்றது.
கிறிஸ்தவ மதகுருமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பேரணியானது வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை வந்தடைந்து அவ்விடத்தில் சிறிது நேரம் அமைதியான முறையில் தமது சுலோகங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதன் பின்னர் கண்டி வீதி வழியாக பழைய பேரூந்து நிலையத்தினை வந்தடைந்த பேரணி அங்கும் தமது சுலோகங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
கிறிஸ்தவ அருட்தந்தையர் அருட் சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 70 பேர் வரையில் கலந்துகொண்ட குறித்த பேரணியில் ஒரு நாடும் 225 திருடர்களும், இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்புவோம், அரசியல்வாதிகளே இனவாதம் பேசுவதை தவிருங்கள், புதிய அரசியல் அமைப்பில் நீதி கிட்டுமா, மூன்றுவேளை உணவு ஒரு வேளை உணவானது போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.(Vavuniyan)
No comments