பல்கேரியா, போலந்துக்கான எரிவாயுவை நிறுத்திய ரஷ்யா
குறித்த இரண்டு நாடுகளும் கொடுப்பனவுகளை ரஷ்ய ரூபிள்களில் செலுத்த மறுத்ததன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காஸ்ப்ரோம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்ய எரிவாயு வழங்குநரிடமிருந்து விநியோகங்கள் குறைக்கப்பட உள்ளதாக போலந்து மற்றும் பல்கேரிய எரிசக்தித்துறையினர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பெற்றிருந்தன
இந்தநிலையில் ரஷ்யா, இயற்கை எரிவாயுவை தற்போதைய போரில் அரசியல் மற்றும் பொருளாதார ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று பல்கேரியாவின் எரிசக்தி அமைச்சர் அலெக்சாண்டர் நிகோலோவ் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஷியன் கோரிக்கைகளுக்கு நாடுகள் அடிபணியக்கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை பல்கேரியா பின்பற்றுகிறது என்று அவர் கூறியுள்ளார்
இதற்கிடையில் எரிவாயு விநியோகத்தடையின் மூலம், ரஷ்யா, தமது மேலும் தனிமைப்படுத்திக்கொண்டதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. (Vavuniyan)
No comments