Breaking News

வவுனியாவில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் இருவர் மாத்திரமே பங்கேற்பு


வவுனியாவில் இன்று தந்தை செல்வாவின் நினைவு தினம் தமிழரசுக்கட்சியினால் ஆனுஸ்டிக்கப்பட்ட நிலையில் இருவர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.


தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் தமிழர் பகுதிகளில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிலையில் வவுனியாவிலும் நகர மத்தியில் உள்ள அவரது சிலையடியில் 9 மணிக்கு நிகழ்வுகள் வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின் தந்தை செல்வா அவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் குறித்த றிகழ்வுக்கு வவுனியா நகரசபை உறுப்பினர் நா. சேனாதிராஜாவுடன் மற்றுமொறு தமிழரசுக்கட்சி உறுப்பினர் மாத்திரமே கலந்துகொண்டு மாலையை அணிவித்திருந்தனர்.

No comments