சீமெந்து விலையேற்றம் காரணமாக தம்பதியினர் அதிர்ச்சி முடிவு
ஹொரணை ஸ்ரீபாலி பல்கலைக்கழக வீதியில் பெண்ணொருவரின் தங்க நகையை சந்தேகநபர் பறித்துள்ளார். பின்னர், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹொரண பொலிஸார், கொள்ளைச் சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதன்படிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் 24 மணித்தியாலங்களில் தங்க நகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையின் போது, தான் மேசன்வேலையில் ஈடுபட்டு வருவதாக சந்தேக நபர் தெரிவித்திருந்தார்.
சீமெந்து மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக வருமானம் குறைந்துள்ளதால் தங்க நகையை கொள்ளையிட தீர்மானித்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். (Vavuniyan)
No comments