Breaking News

50 லட்சம் ரூபாய் அபராதம், 6 மாத சிறை - விடுக்கப்பட்ட எச்சரிக்கை


அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி அதிகவிலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அரிசியை அதிக விலைக்கு விற்றால் 50 லட்சம் ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளை - சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாயாகவும், வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாயாகவும், கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)

No comments