Breaking News

92 ஒக். பெற்றோல் விநியோகம் மட்டு


நாட்டில் 92 ஒக்டேன் பெற்றோல் விநியோகத்தில் மிகவும் கட்டுப்பாடான நிலை காணப்படுவதாக நேற்றையதினம் (17) ஒப்புக்கொண்ட எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இந்த நிலைமை மீட்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று (17) கருத்துத் தெரிவித்த அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், மேலும் தெரிவிக்கையில்,

பெற்றோல் தேவைக்கேற்ப அமைச்சினால் தொடர்ந்தும் வழங்க முடியும் என்றும் ஆனால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக 92 ஒக்டேன் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், இன்றையதினம் (18) பெற்றோல் தொகுதியை இறக்குமதி செய்யவுள்ள கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதால், மூன்று நாட்களுக்குப் பின்னர் பெற்றொல் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்றார்.

தங்களிடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்பகத்தில் போதுமான டீசல் கையிரப்பு உள்ளதாகவும் இது முழு நாட்டுக்கும் போதுமானது என்றும் வரிசை ஒழிப்பதற்கான நடைமுறையை தொடர எதிர்பார்க்கிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். (Vavuniyan) 

No comments