Breaking News

பொதுஜன பெரமுன அலுவலகத்தின் மீது தாக்குதல்


காத்தான்குடி பிரதேச சிறீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தின் மீது இன்று புதன்கிழமை தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தைப் பள்ளிவாசலுக்கு முன்னால் அமைந்துள்ள இவ் அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொதுஜன பெரமுன காத்தான்குடி செயற்பாட்டாளர் எம்.எம்.நவாஸ் தெரிவித்தார்.

அலுவலகத் தாக்குதலின் போது அங்கு ஒட்டப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் கிழித்து வீசப்பட்டிருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைளை மேற்கொண்டுள்ளனர். (Vavuniyan) 

No comments