வவுனியாவில் பெற்றோலை பெற்றுகொள்ள நீண்ட வரிசையில் மக்கள்
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றில் மாத்திரமே தற்போது பெற்றோலை பெற்றுக்கொள்ளகூடிய நிலை காணப்படுவதனால் 1000 க்கும். மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.
வவுனியா மன்னார் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரம் தற்போது பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றோலை பெற்று வருவதோடு விவசாய தேவைகளுக்காகவும் கொள்கலன்களிலும் பெற்றோலை பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது. (Vavuniyan)
No comments