Breaking News

அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக தகவல்?


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ‘ஸ்மார்ட்’ அட்டைகளுக்கு 6 இலட்சம் யூரோக்கள் செலுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியிடம் பணம் இல்லாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும் தற்பொழுது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (Vavuniyan) 

No comments