விபத்தில் நால்வர் படுகாயம்
மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு புத்தளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் இன்று (21) அதிகாலை 12.45 மணியளவில் மாங்குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் சொகுசு வானில் பயணம் செய்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.(Vavuniyan)
No comments