Breaking News

பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்களை பரிந்துரைத்து ஜனாதிபதிக்கு கடிதம்


பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்களை பரிந்துரைத்து 11 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழு ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

டலஸ் அலகப்பெரும, விஜயதாஸ ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பெயர்களை சுயாதீன குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதை நெருக்கடி நிலைமை மற்றும் எதிர்கால தீர்மானங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது, அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. (Vavuniyan) 

No comments