Breaking News

நாட்டில் இன்று மின் துண்டிப்பு இல்லை - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு


நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விசாகப் பூரணை திணைத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயல்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதேவேளை, இன்றைய விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு 244 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.

4 கட்டங்களின் கீழ் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (Vavuniyan) 

No comments