Breaking News

கோட்டாபயவிற்கு இறுகும் நெருக்கடி- வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை


Zoom தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையில் கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது.

சபாநாயகருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்துமபண்டார, ரவூப் ஹக்கீம், ரணில் விக்கிரமசிங்க, ரிஷாத் பதியுதீன், எம். ஏ. சுமந்திரன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

அலி சப்ரி மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் அரசாங்கம் சார்பில் இணைந்தனர். 

அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் அரச தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தனர்.

ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளன.

இதன்படி அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments