பட்டதாரிகளுக்கு புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகள் புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்க முடியும்.இன்று (திங்கட்கிழமை) முதல் அவர்களுக்கான கதவு திறக்கப்படுமெனவும் இது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பிரகாசமான மற்றும் சிறந்தவர்களை ஈர்க்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டம் பெற்ற பிரித்தானியா அல்லாத சிறந்த பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்கும்.
பட்டதாரிகள் எங்கு பிறந்தாலும் தகுதியுடையவர்கள், விண்ணப்பிக்க வேலை வாய்ப்பு தேவையில்லை.வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருந்தால் இரண்டு வருடங்களும் பிஎச்டி பட்டம் பெற்றிருந்தால் மூன்று வருடங்களும் வேலை விசா வழங்கப்படும்.
அவர்கள் சில தேவைகளைப் பூர்த்தி செய்தால், அவர்கள் மற்ற நீண்ட கால வேலைவாய்ப்பு விசாக்களுக்கு மாற முடியும்.
Post Comment
No comments