Breaking News

ஆண் ஒருவர் அடித்து கொலை!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு இன்று வருகை தந்த மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மையில் ஜெமில் தலைமையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இதில் இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே புதைக்கப்பட்டிருப்பது அடையாளப்படுத்தப்பட்டது.

இது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றிருக்காலம் என சந்தேகிக்கப்படுவதாக மருதங்கேணி காவல்துறையினர் தெரிவித்தனர். (Vavuniyan) 

No comments