நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்கள் இறக்குமதி
தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (28) இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளார். (Vavuniyan)
No comments