Breaking News

விற்பனை நிலையமொன்றில் பாரிய தீ விபத்து


யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணிளவில் குறித்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாரியளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதுடன், யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறியமுடிகிறது.

விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், யாழ்ப்பாண காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (Vavuniyan) 

No comments