வவுனியாவின் இயல்பு வாழ்க்கை பதிப்பு!!
பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று கோரியும்
தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியாவில் பூரண ஆதரவு வழங்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், தினச்சந்தை, பாடசாலைகள், அரச திணைக்களங்கள் வங்கிகள் ஆகியவற்றின் செயற்பாடுகள் முற்றாக முடங்கின.
நகருக்கு வருகைதந்த பொதுமக்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக குறைவடைந்த நிலையில் பொதுப்போக்குவரத்து சேவைகளும் ஸ்தம்பித்திருந்தது.
No comments