அரச பணியாளர்கள் தொடர்பில் வெளிவரவுள்ள விசேட சுற்றறிக்கை
அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் சேவைக்கு அழைக்கும் வகையில் இன்று விசேட சுற்றறிக்கை வெளியாகவுள்ளது.
சகல அரச நிறுவனங்களையும் உள்ளடக்கிய வகையில் இச்சுற்றறிக்கை வெளிவரும் என அரச பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய அரச சேவையாளர்களை பணிகளுக்கு செல்லவேண்டாம் என்று அண்மைய நாட்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.
எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இந்தக் கோரிக்கையை அவர விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments