Breaking News

வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி


பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்றுமாலை வவுனியாவை வந்தடைந்தது.


இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி நேறைய தினம்  திருகோணமலையை வந்தடைந்தது. 

அதனைந்தொடர்ந்து இன்றைய தினம் மதியம் வவுனியாவை அடைந்த குறித்த பேரணி வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு சென்றது.

அங்கு வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் பகிரப்பட்டது. 

அங்கிருந்து மாங்குளம் ஊடாக நாளையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நோக்கிச்செல்லவுள்ளது

பேரணியில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)











No comments