எம்.பிக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேடமாக நாடாளுமன்றம் கூட்டப்படாது! - சபாநாயகர்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்றத்தை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். (Vavuniyan)
No comments