அஜித் ராஜபக்ஷ எம்.பி பிரதி சபாநாயகராக தெரிவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கவிரத்ன 78 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் நாடாளுமன்றில் இன்று முற்பகல் முன்மொழியப்பட்டு, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததோடு, ஜி.எல்.பீரிஸ் எம்.பி அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்திருந்தார். (Vavuniyan)
No comments