Breaking News

முள்ளிவாய்க்கால் - காலிமுகத்திடலில் பொதுச்சுடர் ஏற்றி அகவணக்கம்


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்காக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

காலிமுகத்திடலிலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டம் இடம்பெறும் பகுதியில் இன்று முற்பகல் ஒன்றுகூடியிருந்தவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.

இறுதி கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முகமாக இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று முற்பகல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாந்தம் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. (Vavuniyan) 

No comments