Breaking News

ரஷ்ய கடற்படை போர்க்கப்பலை அழிக்க அமெரிக்கா உதவி



ரஷ்ய கடற்படை பலத்தின் சின்னமாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பலை உக்ரைன் இராணுவம் தாக்கி முழ்கடிப்பதற்கு உளவுத் தகவல் மூலம் அமெரிக்கா உதவியதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கார தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘மாஸ்க்வா கப்பலின் இருப்பிடத்தை உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்க உளவுத் துihன் தெரியப்படுத்தியது.

அந்தத் தகவலின் அடிப்படையில்தான் மாஸ்க்வா கப்பலின் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது.இதில் கப்பலின் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தியது மட்டும்தான் அமெரிக்காவின் பங்காகும்.

 கப்பல் மீது தாக்குதல் நடத்தி மூழ்கடிப்பதற்கான முழு முடிவும் உக்ரைனால் மட்டுமே எடுக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே போரில் ரஷ்யாவின் 24,900 படை வீரர்கள், 1,110 பீரங்கிகளை அழித்துள்ளோம் என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments