Breaking News

சிறுமி விவகாரம்: சி.ஐ.டி விசாரணை


பண்டாரகம - அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பண்டாரகம - அட்டுலுகமவை சேர்ந்த 9 வயதான குறித்த சிறுமி நேற்று முன்தினம் காணாமல் போன நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக 3 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (Vavuniyan) 

No comments