Breaking News

வவுனியா சிறுமி நீரில் மூழ்கி மூச்சு திணறலால் ஏற்பட்ட மரணம் - பிரதே பரிசோதனை முடிவில் தெரிவிப்பு


வவுனியா கணேசபுரம்  பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் (30.05.2022) இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்ட 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சு திணறலால் ஏற்பட்ட மரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சடலம் மீட்கப்பட்ட நிலையில் குறித்த சிறுமியின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேகம் நிலவியதினையடுத்து சிறுமியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (01.06.2022) மதியம் சட்ட வைத்திய அதிகாரியினால் சடலம் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இவ் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில்  சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுஜன் தெரிவிக்கையில், 

சிறுமி உடற்பகுதிக்குள் அதிகளவில் நீர் சென்றமையினால் மூச்சுதிணரல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதுடன் சிறுமியின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது எவ்வித தடயங்களோ காணப்பட்டவில்லை என   தெரிவித்தார். 

No comments