வவுனியாவில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் செய்த செயல்
வவுனியாவில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு குளிர்பானம் வழங்கி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர்.
வவுனியா மன்னார் வீதி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக எரிபொருள் எதுவும் வராத நிலையில் பொதுமக்கள் தமது வாகனங்களுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் குளிர்பானம் வழங்கப்பட்டது.
இதேவேளை இச்செயற்பாடு காரணமாக அங்கிருந்தவர்கள் அதனை பெற்று மகிழ்சியுடன் பருகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments