Breaking News

முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பலியான பரிதாபம்!


கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் போடப்பட்டிருந்த சேலையில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக ஹைபொரஸ்ட் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை இது தொடர்பாக தாயார் தெரிவிக்கையில், தான் வெளியில் சென்றிருந்ததாகவும், சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த போதே இவ்வாறு இடம்பெற்றதாக தெரிவித்தார். (Vavuniyan) 

No comments