சட்டத்தை திருத்தினால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர், பாராளுமன்ற கோப் குழுவில் அளித்த வாக்குமூலத்தின் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தம் காரணமாகவே மின்சார சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ள உண்மை வெளியே வந்துள்ளது.
இது தொடர்பில் தங்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் மின்சார சபையின் முன்னாள் தலைவர் காரணங்களை முன்வைத்துள்ள நிலையில், நீங்கள் ஊடக அறிவிப்பு ஊடாக அதனை நிராகரித்துள்ளமை மூலம் தவறு சரியாகி விடாது.
முன்னாள் தலைவர் தான் அப்போது முகம்கொடுத்த அழுத்தமே காரணமாகவே அவ்வாறான வாக்குமூலம் ஒன்றை கோப் குழுவில் முன்வைதத்தாக தெரிவித்தாலும் அதன்மூலம் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பிலும் அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் தொடர்பிலும் மக்களுக்கு பாரிய அவநம்பிக்கை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அதன்மூலம் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தை மண்டியிட செய்து தமது பூகோள அரசியல் ஒழுங்குப் பத்திரத்தை செயற்படுத்தவும் இந்திய அரசு செயற்பட்டு வரும் நிலையில், அரச தலைவர்கள் பொறுப்பு பாரதூரமான நிலையில் உள்ளது.
மின்சார சட்டத்தை திருத்துவதன் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கும் நோக்கத்தைப் பார்க்குமிடத்து அது இந்தியாவின் அழுத்தத்தால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு என்பதை சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ள முடியும் என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments