அடுத்துவரும் நாட்களில் மிக மோசமான நிலை ஏற்படும்
எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். இதனால் நாட்டில் எரிபொருள் வரிசைகள் மேலும் நீடிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 800 மெட்ரிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது.
எனினும், அந்த அளவுகள் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. (Vavuniyan)
No comments