Breaking News

கட்டாய மரண தண்டனையை இரத்து செய்த மலேசிய அரசாங்கம்



கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது.

2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஒரு சீர்திருத்தக் கூட்டணி மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது, ஆனால் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்பால் திட்டம் ஸ்தம்பித்தது.

அப்போதிருந்து, மரண தண்டனை கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை குறைக்க வேண்டும் என்ற நீர்த்துப்போன திட்டம் முன்வைக்கப்பட்டது.ஆனால், தற்போது கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

No comments